--- --:--:-- --

வழிகாட்டி பெயர் பலகை விழுந்து பெரும் விபத்து..!

2

சென்னை ஆலந்தூரில் அரசு பேருந்து மோதியதில் மிகப்பெரிய வழிகாட்டி பெயர் பலகை விழுந்து பெரும் விபத்து ஏற்பட்டது. விபத்தில் காயமடைந்து சுயநினைவை இழந்த ஒருவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையத்தை ஒட்டிய சாலையோரத்தில் வாகன ஓட்டிகள் அறிந்து கொள்ளும் வகையில் பெரிய அளவிலான பெயர் பலகை நிறுவப்பட்டிருந்தது. பரபரப்பான இந்த சாலையில் கோயில்களை நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பேருந்து ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து வழிகாட்டி பெயர் பலகை மீது பயங்கரமாக மோதியது.

 

இதில் பெயர்ப்பலகை நிறுவப்பட்டிருந்தது. சிதலமடைந்து அந்த பலகை அடியோடு சாய்ந்து சாலையில் விழுந்தது. அந்த நேரத்தில் இரு சக்கர வாகனத்தில் சென்ற சண்முகசுந்தரம் என்ற இளைஞர் பலகை மோதியது. இதில் அவர் சுயநினைவை இழந்தார். மேலும் இருசக்கர வாகனத்தில் சென்ற இருவருக்கும் லேசான காயம் ஏற்பட்டது.

 

தகவலறிந்து சென்ற காவல்துறையினர் பொக்லைன் எந்திரம் உதவியுடன் பெயர் பலகையை அகற்றி போக்குவரத்தை சரி செய்தனர். விபத்து ஏற்படுத்திய அரசு பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துநரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon