காவல் நிலையத்துக்குள் புகுந்து காவலரை தாக்கிய நபர் கைது..!
டெல்லியில் காவல் நிலையத்துக்குள் புகுந்து அங்கிருந்த காவலரை தாக்கிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார். ஆனந்த் காவல் நிலையத்தில் புகுந்த கும்பல் அங்கிருந்த தலைமை காவலர் பிரகாஷை சரமாரியாக தாக்கியதோடு மன்னிப்பு கேட்க வைத்தது தொடர்பான வீடியோ வெளியான நிலையில் சதீஷ்குமார் என்ற வழக்கறிஞரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
மேலும் தாக்குதல் நடத்திய கும்பலை பிடிக்க குழு அமைக்கப்பட்டுள்ளதாக காவல் உதவி ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





