தமிழகத்தில் 12 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு..!
தமிழகத்தில் வரும் வியாழக்கிழமை வரை 12 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேற்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், விருதுநகர், நெல்லை, கன்னியாகுமரி, கரூர், மதுரை, உள்ளிட்ட வட தமிழக மாவட்டங்கள் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான வரை மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
தமிழக கடலோரப் பகுதிகளில் மன்னார் வளைகுடா, இலங்கையை ஒட்டிய தென்மேற்கு வங்க கடல் பகுதிகள், லட்சத்தீவு, கேரள கர்நாடக கடலோரப் பகுதிகள் மற்றும் மத்திய கிழக்கு கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசக் கூடும் என்பதால் மீனவர்கள் அந்தப் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





