நிலச்சரிவில் சிக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழப்பு..!
கர்நாடக மாநிலம் முழுவதும் நாற்பத்தி எட்டு மணி நேரமாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக பெங்களூரு, மைசூரு உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. கடலோர கர்நாடகாவில் உடுப்பி, தட்சிண கன்னடா மாவட்டத்திலும் கன மழை பெய்து வருகிறது. இதனால் மழை நீர் புகுந்ததால் மண்சரிவு ஏற்பட்டுள்ளது.
உத்தண்டி என்ற இடத்தில் மண் சரிவு ஏற்பட்டு வீட்டின் மீது விழுந்து மூடியது ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.





