நோயாளிக்கு குளுக்கோஸ் செலுத்திக் கொண்டிருந்த போதே எலி கடித்த அதிர்ச்சி வீடியோ..!
நோயாளிக்கு குளுக்கோஸ் செலுத்திக் கொண்டிருந்த போதே அந்த குளுக்கோசை கடித்த எலியின் அதிர்ச்சி வீடியோ ஆன்லைனில் வைரலாகி வருகிறது. சத்தீஸ்கர் மாநிலத்தில் ஜக்தல்பூர் நகரில் மருத்துவமனை கல்லூரி உள்ளது.
மருத்துவமனை கல்லூரி உள்ள நிலையில் அங்குள்ள ஒரு நோயாளிக்கு குளுக்கோஸ் செலுத்தப்பட்டு கொண்டிருந்தது. ஒரு துளையில் இருந்து வந்த எலி கம்பி வழியாக இறங்கி குளுக்கோஸை கடித்து உறிஞ்சத் தொடங்கியது. இதனை அங்கிருந்த நோயாளி உறவினர் ஒருவர் எதேச்சையாக பார்த்து செல்போனில் வீடியோ எடுக்க தொடங்கியுள்ளார்.
உடனே அந்த எலி அங்கிருந்து தப்பி ஓடி விட்டது. இந்த சம்பவம் பற்றி அறிந்த மருத்துவ குழுவினர், கண்காணிப்பாளர் மருத்துவமனை வளாகத்தில் எலிகள் அதிகமாக இருப்பதை ஒப்புக்கொண்டார்.





