8 வயது சிறுமியை கடத்த முயன்ற ஐஸ் வியாபாரி..!
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே 8 வயது சிறுமியை கடத்த முயன்ற வியாபாரியை போலீசார் கைது செய்தனர். அந்த சிறுமியை முகமது ரபிக் என்ற அந்த வியாபாரி பின்புறம் அழைத்து சென்று கைகளை கட்டி வாயில் துணியை அடைத்ததாக கூறப்படுகிறது.
5 வயது சிறுவன் ஒருவன் சத்தம் போடவே அவர்களை விட்டு விட்டு தப்பி ஓடினான். இருப்பினும் பெண்கள் போலீசில் ஒப்படைத்தனர். குற்றத்தை ஒப்புக்கொண்டதால் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.





