கடல் உள்வாங்கியதால் ராமேஸ்வரத்தில் பரபரப்பு..!
ஒரு பக்கம் கடல் சீற்றமும், ஒரு பக்கமும் கடல் உள்வாங்கியதால் ராமேஸ்வரம் மீனவர்கள் கூறப்பட்டுள்ளன. மீன்பிடி துறைமுக கடல் பகுதி வழக்கத்தைவிட உள்வாங்கியுள்ளதால் அந்த பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நாட்டுப் படகுகள் தரை தட்டி உள்ளது.
தெற்கு மற்றும் வடக்கு கடல் பகுதி சீற்றத்துடன் காணப்படும் நிலையில் ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகம் கடல் உள்வாங்கியதால் மீனவர்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. எனவே கடல் சார் ஆராய்ச்சி விஞ்ஞானிகள் ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுக பகுதியில் அடிக்கடி கடல் உள்வாங்க காரணம் குறித்து ஆய்வு செய்ய வேண்டும் மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடன் வாங்குவதால் கரையோரம் நிறுத்தப்படும் நாட்டுப் படகுகள் தரை தட்டி சேதமடைகிறது. எனவே தூண்டில் வளைவு கூடிய துறைமுகம் அமைத்து தர வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




