40க்கும் மேற்பட்ட முறை உருவ மாற்று அறுவை சிகிச்சை செய்து பாதிக்கப்பட்ட பெண்..!
பிரேசில் நாட்டைச் சேர்ந்த பிரபல நடிகை ஜெனிபர் என்பவர் தனது உருவத்தை அமெரிக்க மாடல் அழகி கிம் கர்தாஷியன் போல் மாற்றிக்கொள்ள வேண்டும் என்பதற்காக 40க்கும் மேற்பட்ட முறை உருவ மாற்று அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டு உள்ளார்.
சிறுவயதிலிருந்தே பிரபலங்களின் நடை உடை பாவனைகளை இமிடேட் செய்ய தொடங்கிய நடிகை ஜெனிஃபர் 5 கோடி ரூபாய்க்கும் அதிகமாக செலவு செய்து தன்னை மாடல் அழகி போல் மாற்றி கொள்ள அறுவை சிகிச்சை கேட்டுள்ளார்.
ஒவ்வொரு முறை நடந்த அறுவை சிகிச்சையில் ஏற்பட்ட ஏதாவது ஒரு குறைபாட்டால் கொஞ்சம் கொஞ்சமாக இயற்கையாக இருந்த அழகு மாறி ஜெனிஃபர் விசித்திரமான ஒரு அமைப்புக்கு மாறியதாக கூறப்படுகிறது. ரசிகர்கள் கிம் கர்தாஷியன் என்று அழைப்பது தனக்கு ஆத்திரமாக வந்ததால் தான் எளிதாக இருப்பது என்று முடிவெடுத்து தனது பழைய உருவத்திற்கு மாற்றிக்கொள்ள வேண்டும் என்று அறுவை சிகிச்சை மேற்கொள்ள இருப்பதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்வது தனக்கு போதை போல இருந்ததால் எதைப்பற்றியும் கவலைப்படாமல் அதனை மேற்கொண்டதாகவும் ஒருகட்டத்தில் அது தனக்கு திருப்தியையும் மகிழ்ச்சியையும் தரவில்லை என்பதால் பழைய நிலைக்கு திரும்புவதற்காக இஸ்தான் புல்லில் உள்ள மருத்துவரை அணுகி பழைய உடலமைப்பை பெறுவதற்காக 95 லட்சம் ரூபாயை அறுவை சிகிச்சைக்காக வழங்கியிருப்பதாக தெரிவித்துள்ளார்
📱 Share on WhatsApp 𝕏 Share on X




