பாலியல் வன்கொடுமை வீடியோவை நேரலை செய்த சம்பவம்..!
மஹாராஷ்டிராவில் பாஜக நிர்வாகியால் பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கப்பட்ட ஒருவர் அதனை முகநூல் பக்கத்தில் நேரலையாக வெளியிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சோலாப்பூரை சேர்ந்த ஸ்ரீகாந்த் என்பவர் வேலை வாங்கி தருவதாக கூறி பாலியல் வன்கொடுமை செய்ததாக பாதிக்கப்பட்ட இளம்பெண் நேரலை வீடியோ மூலமாக பேசியுள்ளார். ஸ்ரீகாந்த் இருக்க அந்தப் பெண் அழுது கொண்டு இந்த வீடியோவில் பேசுகிறார்.
உடனே ஓடிவந்து செல்போனை தட்டிவிட்ட ஸ்ரீகாந்த் சத்தம் போடும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்த வீடியோ பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் இருந்து பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




