லாரி மோதியதில் புதுமணத் தம்பதிக்கு நேர்ந்த சோகம்..!
சேலம் அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் பெண் பரிதாபமாக உயிரிழந்தார். சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே இருசக்கர வாகனம் மீது பால் லாரி மோதி விபத்துக்குள்ளானது. இதில் இருசக்கர வாகனத்தில் இருந்த புதுமணப்பெண் சௌந்தர்யா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
படுகாயம் அடைந்த கணவர் நீலகண்டன் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவர்களுக்கு கடந்த 9ஆம் தேதி திருமணம் ஆனது. அதற்குள் புதுமணப்பெண் உயிரிழந்த சம்பவம் உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




