--- --:--:-- --

3 வயது குழந்தையை கொன்று ஐஸ் பெட்டியில் வைத்திருந்த தாய்..!

6

மெரிக்காவில் பெற்ற குழந்தையை கொலை செய்து ஐஸ் பெட்டியில் வைத்திருந்த தாய் கைது செய்யப்பட்டார். டெட்ராய்டு நகரை சேர்ந்த அசுராடிக் பிரான்ஸ் என்பவரின் 3 வயது குழந்தை சாசாலன் வீட்டில் இல்லாதது குறித்து கேட்டபோது உறவினர் ஒருவரின் வீட்டில் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

 

அங்கு சென்று கேட்டபோது குழந்தை இல்லை என்பது தெரிய வந்ததையடுத்து குழந்தைகள் கண்காணிப்பு அமைப்பிடம் அவர் புகார் அளித்துள்ளார்.

 

அதன்பேரில் அதிகாரிகள் சோதனையிட்டதில் வீட்டின் பாதாள அறையில் உள்ள ஐஸ் பெட்டியில் உறைந்த நிலையில் சடலம் கண்டெடுக்கப்பட்டது. இதனையடுத்து குழந்தையின் தாயை காவல்துறையினர் கைது செய்தனர்.

 

Right Menu Icon