--- --:--:-- --

2 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு ..!

5

நீலகிரி மற்றும் கோவையில் இன்று கனமழை பெய்யக்கூடும் என மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. திசை வேக மாறுபாடு காரணமாக தமிழ்நாட்டில் 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

நீலகிரி, கோவை மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி, விருதுநகர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, செங்கல்பட்டு விழுப்புரம் உள்ளிட்ட11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

வங்ககடல், ஆந்திர கடலோரப் பகுதிகள், குமரிக்கடல், மன்னார்வளைகுடா, லட்சத்தீவு, கேரளா மற்றும் கர்நாடக கடலோரப் பகுதிகள் மற்றும் அரபிக் கடல் பகுதிகளில் மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

Right Menu Icon