--- --:--:-- --

தங்களுடைய மருந்துகளால் 90 விழுக்காடு பலன் கிடைத்துள்ளது – அமெரிக்கா, ஜெர்மனி நிறுவனங்கள்

9

கொரோனா பெருந்தொற்றை தடுப்பதில் தங்களுடைய மருந்துகளால் 90 விழுக்காடு பலன் கிடைத்துள்ளதாக அமெரிக்கா, ஜெர்மனி நிறுவனங்கள் அறிவித்துள்ளன. உலகம் முழுவதும் பெருந்தொற்றால் ஐந்து கோடிக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 12 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

 

பெருந்தொற்றுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் நோக்கில் பல்வேறு நாடுகளும் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் அமெரிக்காவில் உள்ள பிஜர் என்ற மருந்து நிறுவனமும் ஜெர்மனியின் பயோடெக் மருந்து நிறுவனமும் தங்களுடைய தடுப்பு மருந்து, பெருந்தொற்றை தடுப்பதில் 90 விழுக்காடு பலன் கிடைத்துள்ளதாக அறிவித்துள்ளது.

 

இதுபற்றி ஆயிரக்கணக்கான தன்னார்வலர்களிடம் நிறுவனங்கள் ஆய்வு நடத்தி வருகிறது. இதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் 130 கோடி டோஸ் உற்பத்தி செய்ய முடியும் எனவும் அந்த நிறுவனம் கூறியுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon