--- --:--:-- --

ஆங்கிலேயர் கால நிலவரி வசூல் ரத்து – அமைச்சர் செங்கோட்டையன்

7

ருவாய்த்துறை பதிலுரையில் அமைச்சர் செங்கோட்டையன் பேசுகையில், “கடந்த ஆட்சியில் 3.5 லட்சம் காலி பணியிடங்களில் 25% தான் நிரப்பப்பட்டுள்ளது. 3 ஆண்டுகளில் காலி பணியிடம் இல்லை என்ற நிலை உருவாகும். ரூ. 1.02 கோடியில் பொதுமக்கள் இருப்பிடங்களுக்கு அருகிலேயே சேவை பெற சென்னையில் முதற்கட்டமாக 12 சிறுவட்ட அலுவலகங்கள் அமைக்கப்படும்.

 

 

ஏழை, எளியோர் பயனடையும் வகையில் வீட்டுமனை பட்டா சிறப்பு திட்டம். 20 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பயனடையும் வகையில் சிறப்பு திட்டம். சென்னையில் முதற்கட்டமாக 12 சிறுவட்ட அலுவலகங்கள் அமைக்கப்படும். பொதுமக்கள் இருப்பிடங்களுக்கு அருகிலேயே சேவை பெற நடவடிக்கை எடுக்கப்படும். ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் கொண்டு வரப்பட்ட நிலவரி வசூல் ரத்து செய்யப்படும்.

 

 

12,466 கிராம நிர்வாக அலுவலர்களுக்கு கையடக்க கணினிகள். 1,253 குறுவட்ட வருவாய் ஆய்வாளர்களுக்கும் கையடக்க கணினிகள் ரூ.68.63 கோடி மதிப்பீட்டில் வழங்கப்படும். கடலோர மாவட்டங்களுக்கான வெள்ளத் தணிப்பு நடவடிக்கைகள். ரூ.3.90 கோடி மதிப்பீட்டில் திட்ட அறிக்கை தயாரிக்கப்படும்.

 

 

கிராம நத்தம் காலி மனைகளில் வீடுகட்டி வசித்துவரும் தகுதிவாய்ந்த 20 இலட்சத்திற்கும் மேலான ஏழை, எளிய குடும்பங்கள் பயனடையும் வகையில், வீட்டுமனைப் பட்டா வழங்கிட சிறப்புத் திட்டம். தமிழ்நாடு நிலச்சீர்திருத்த (நில உச்சவரம்பு நிர்ணயம்) சட்டம் 1961, பிரிவு 37A மற்றும் 37B-ன் கீழ் அரசின் அனுமதி வழங்குவதற்கான தற்போது நடைமுறையிலுள்ள நெறிமுறைகளை எளிமைப்படுத்திட உரிய சட்டத் திருத்தங்கள் மேற்கொள்ளப்படும். விவசாயிகள் மற்றும் நில உரிமையாளர்கள் பயன்பெறும் வகையில், ஆங்கிலேயர் காலத்து நிலவரி வசூல் 1436-ஆம் பசலி (நடப்பாண்டு) ஆண்டு முதல் ரத்து செய்யப்படும்.” என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon