இந்திய அணியில் இடம் பிடித்த கிரிக்கெட் வீரர் நடராஜனுக்கு முதலமைச்சர் வாழ்த்து தெரிவித்துள்ளார்..!
ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள இந்திய அணியில் இடம் பிடித்த தமிழக வேகப்பந்து வீச்சாளர் நடராஜனுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் இல் வெளிப்படுத்திய ஆட்டங்களால் தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி நேரடியாக 15 பேர் கொண்ட அணியிலும், நடராஜன் கூடுதல் பவுலராகவும் இந்திய அணிக்கு தேர்வாகியிருந்தனர். இந்நிலையில் வருண் சக்கரவர்த்தி காயம் காரணமாக விலகியதால் அந்த இடம் நடராஜனுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நடராஜனுக்கு ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்து இருக்கும் தமிழக முதலமைச்சர் பழனிசாமி கிரிக்கெட் உலகின் ஜாம்பவான்களை அசாத்திய பந்துவீச்சால் திக்குமுக்காட செய்த நடராஜன் இந்திய அணிக்கு தேர்வாகி இருப்பது மிகுந்த மகிழ்ச்சியும், பெருமிதமும் அளிக்கிறது என குறிப்பிட்டுள்ளார்.
நடராஜனின் சிகரம் நோக்கிய பயணத்தில் தொடர் வெற்றிகள் பெற மனம்மார்ந்த வாழ்த்துக்கள் எனவும் முதலமைச்சர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.






