--- --:--:-- --

காவிரி நீர் மேலாண்மை ஆணைய உத்தரவை பின்பற்றுங்க..!

01

காவிரி நீர் மேலாண்மை ஆணைய உத்தரவின்படி காவிரியில் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்துவிட கர்நாடக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டுக்கு திறந்துவிட வேண்டிய காவிரி நீரை கர்நாடகா திறந்துவிடாததை எதிர்த்து தமிழக அரசு, திமுக சார்பில் தொடரப்பட்ட வழக்குகள் இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
வழக்கு விசாரணையின் போது காவிரி ஒழுங்குமுறை குழு மற்றும் மேலாண்மை ஆணையம் பரிந்துரைத்த அளவை விடக் கர்நாடகா மிகக் குறைந்த அளவே நீரை திறந்துள்ளதாக வாதிடப்பட்டது.

 

 

அப்போது, தேவைக்கு அதிகமான நீரை தமிழகத்திற்கு திறந்துவிட்டிருப்பதாக கர்நாடகா வாதிட்டதற்கு, “கடவுள் கொடுத்த மழைநீரை முழுமையாக தேக்க முடியாது என்பதால், நீரை கர்நாடகம் திறந்து விட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. காவிரி நீர் மேலாண்மை ஆணையம் மற்றும் ஒழுங்குமுறைக் குழு பிறப்பிக்கும் நீர் பங்கீட்டு உத்தரவுகளை கர்நாடகா அரசு கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும் எனவும் விசாரணையின் போது உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியது.

 

தொடர்ந்து கர்நாடகா சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஷியாம் திவான், தமிழகத்திற்கு நாள்தோறும் 12,000 கனஅடி வீதம் 15 நாட்களுக்குத் தண்ணீரை திறந்துவிட காவிரி மேலாண்மை ஆணையம் பிறப்பித்த உத்தரவை கர்நாடக அரசு பின்பற்றும் என உறுதியளித்தார்.

 

 

நீர்திறப்பு நிலவரம் குறித்த முழுமையான அறிக்கையை தாக்கல் செய்ய கர்நாடக அரசுக்கு உத்தரவிட்ட உச்சநீதிமன்றம் அடுத்தக்கட்ட விசாரணை ஆகஸ்ட் 24-ம் தேதிக்கு ஒத்துவைத்தது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon