அமெரிக்க பாதுகாப்புதுறை அமைச்சரை அதிரடியாக நீக்கிய ட்ரம்ப்..!
அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் மார்க் எஸ்பரை அதிபர் டொனால்டு அதிரடியாக நீக்கியுள்ளார். மார்க் எஸ்பர் உடனடியாக அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்படுவதாகவும் அவருக்கு பதில் தேசிய பயங்கரவாத தடுப்பு மையத்தின் இயக்குனர் கிறிஸ்டோபர் அமைச்சராக நியமிக்கப்படுவதாகவும் தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
அண்மைகாலமாக அமெரிக்காவில் நடந்து வந்து இணைய ரீதியான மோதல்கள் விவகாரத்தை கட்டுப்படுத்த மார்க் எஸ்பர் நடவடிக்கை எடுக்கவில்லை என்று அதிருப்தியில் டிரம்ப் இருந்ததாகவும் அதன் காரணமாகவே அவர் இந்த முடிவுக்கு வந்திருக்கலாம் என்றும் தெரிகிறது.
அதிபர் தேர்தலில் டிரம்ப் வெற்றி பெறாத நிலையில் வரும் ஜனவரி 19ஆம் தேதி வரை மட்டுமே பதவியில் அவர் நீடிக்க முடியும். இந்நிலையில் குறுகிய காலமே உள்ள நிலையில் பாதுகாப்பு அமைச்சரை டிரம்ப் நீக்கியது கவனத்தை ஈர்த்துள்ளது. அண்மையில் இந்தியா வந்த அமைச்சர் மார்க் எஸ்பர் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.






