--- --:--:-- --

8k உயர் தர வீடியோ காட்சி சோதனை..!

8

சீனாவில் 8k அல்ட்ரா டெஃபநிசன் எனப்படும் உயர் தர வீடியோ காட்சி வடிவத்தை சோதனை முயற்சியாக ஒளிபரப்பு செய்ய சீன ஊடக குழுமம் முடிவு செய்துள்ளது. காட்சியை படம் பிடிப்பது, தயாரிப்பது மற்றும் ஒளிபரப்புவது என பல்வேறு ஆராய்ச்சிகளுக்குப் பிறகு இந்த சோதனை முயற்சி ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது.

 

இதன்மூலம் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கான தொழில்நுட்பம் அதிகரிக்கும் என்றும், புதிய தொழில்நுட்ப வளர்ச்சிக்கான வழிகாட்டியாக இருக்கும் என்றும் சீன ஊடக குழுமம் தெரிவித்துள்ளது.

 

சீனாவின் ஒன்பது முக்கிய நகரங்களில் உள்ள 30 பெரிய அளவிலான திரை மானிடர்களில் இந்த சோதனை முயற்சி நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Right Menu Icon