--- --:--:-- --

காதலியின் திருமணத்திற்கு வந்த காதலன்..! கணவனின் அனுமதியோடு முன்னாள் காதலனை கட்டியணைத்த மணப்பெண்..!

7

காதல் என்பது என்னவோ இந்த காலகட்டத்திலும் மாறாமல் இருக்கிறது. ஆனால் நாகரிக காதல் என்ற போர்வையில் காதலர்கள் செய்யும் அட்ராசிட்டிஸ் அளவு கடந்து சென்று கொண்டுள்ளது. இந்த நிலையில் திருமண மேடையிலேயே மணப் பெண் ஒருவர் தனது முன்னாள் காதலருடன் செய்த செயல் இணையத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.

 

இந்தோனேஷியாவில் தனது காதலியின் திருமணத்திற்கு இளைஞர் ஒருவர் சென்றுள்ளார். மணமேடையில் அனைவரும் போட்டோ எடுத்து வாழ்த்துக்கள் தெரிவிக்க மாஜி காதலன் வாழ்த்துக்கள் சொல்ல முன் நின்று இருக்கிறார். மணப்பெண்ணிடம் கைகுலுக்கி வாழ்த்து தெரிவிக்க கை நீட்டியிருக்கிறார்.

 

அந்த காதலி அதனை தவிர்த்து மணப்பெண் தனது மாஜி காதலனை கட்டியணைக்க வேண்டும் என்று தனது கணவரிடம் அனுமதி கேட்கிறார். திருமண மேடையில் கட்டி அணைத்திருக்கிறார் அந்த மணப்பெண். இந்த வீடியோவை மணப்பெண் தனது டிக்டாக்கில் வெளியிட அது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

 

ஒருபுறம் கணவரின் பெருந்தன்மையான செயலை பல நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர். மறுபுறம் இந்த செயல் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.

Leave a Reply

Right Menu Icon