தமிழகத்தின் புதிய தலைமைச் செயலாளராக ராஜீவ் ரஞ்சன் பொறுப்பேற்றார்..!
தமிழகத்தின் புதிய தலைமைச் செயலாளராக ராஜீவ் ரஞ்சன் பொறுப்பேற்றுக்கொண்டார். தலைமை செயலகத்திற்கு சென்ற அவர் தமது பணிகளை தொடங்கியுள்ளார்.
1985 ஆம் ஆண்டு இந்திய ஆட்சிப் பணியில் இணைந்த ராஜீவ் ரஞ்சன் அண்மையில் மாநில பணிக்கு மாற்றப்பட்டார். மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை செயலாளராகவும் இவர் பணியாற்றியுள்ளார்.
25 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு துறைகளில் செயலாளராக பணியாற்றிய அனுபவம் கொண்ட ராஜீவ் ரஞ்சன் ஒருங்கிணைந்து திருச்சி மாவட்ட ஆட்சியராகவும் பொறுப்பில் இருந்துள்ளார். தற்போது 47வது தலைமை செயலாளராக பொறுப்பேற்றுள்ள அவரின் பதவிக்காலம் வரும் செப்டம்பர் மாதத்துடன் முடிவடைகிறது.
இதனிடையே தலைமைச் செயலாளர் பதவியிலிருந்து ஓய்வுபெற்ற சண்முகம் தமிழக அரசின் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார். ஓராண்டு காலத்திற்கு தமிழக அரசின் ஆலோசகராக செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.






