--- --:--:-- --

கேதார்நாத்தில் 6 லட்சம் பக்தர்கள் தரிசனம்..!

9

கேதார்நாத்தில் நேற்றுவரை 6 லட்சத்திற்கும் மேற்பட்டோர் தரிசனம் செய்துள்ளனர். பத்ரிநாத், கேதார்நாத், கங்கோத்ரி, யமுனோத்ரி ஆகிய 4 கோயில்களும் ஆண்டுதோறும் அட்சய திருதியை நாளில் திறக்கப்பட்டு, தீபாவளி அன்று அடைக்கப்படும்.

 

இந்த ஆண்டு நடை திறக்கப்பட்ட நாளில் இருந்து திரளான பக்தர்கள் குவிந்து வருகின்றனர். கேதார்நாத்தில் மட்டும் 6,73,393 பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர்.

Right Menu Icon