மரங்களை வெட்டினால் 59 கோடியே 75 லட்சம் ரூபாய் அபராதம் மற்றும் 10 வருடங்கள் சிறை..!
சவுதி அரேபியாவில் மரங்களை வெட்டினால் 59 கோடியே 75 லட்சம் ரூபாய் அபராதமும், 10 வருடங்கள் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. பாலைவன நாடான சவுதியில் சுற்றுச்சூழல் வளத்தை பெருக்குவதற்காக பசுமை திட்டத்தை அந்நாட்டு அரசு மேற்கொண்டு வருகிறது.
அடுத்தாண்டு ஏப்ரலுக்குள் நாடுமுழுவதும் ஒரு கோடி மரங்களை நட திட்டமிட்டுள்ளது. மேலும் சுற்றுச்சூழல் அழிப்பிற்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில் இதன் ஒரு பகுதியாக மரங்களை வெட்டுவதற்கும், எடுத்து செல்வதற்கும் அவை சார்ந்த மண் வளத்தை அதிகரிப்பதற்கும் கடுமையான தண்டனைகள் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி மரங்களை வெட்டினால் 59 கோடியே 75 லட்சம் ரூபாய் அபராதமும், 10 வருடங்கள் சிறை தண்டனையும் விதிக்கப்படும் என்று அந்நாட்டு அரசு எச்சரித்துள்ளது.






