இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு..!
குமரி கடல் பகுதியில் நிலவும் கீழ் அடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் 8 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நெல்லை, கன்னியாகுமரி, ராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி, தென்காசி சேலம் நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பெரும்பாலான மாவட்டங்கள் புதுச்சேரி மற்றும் காரைக்கால் இன்னும் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்றும், நாளையும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.






