--- --:--:-- --

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் வரும் 30ஆம் தேதி தீர்ப்பு..!

6

பாபர் மசூதி இடிப்பு வழக்கு தொடர்பாக சிபிஐ சிறப்பு நீதிமன்றம் வரும் 30ஆம் தேதி தீர்ப்பளிக்க உள்ளது. பாபர் மசூதி இடிப்பு வழக்கில் பாஜக மூத்த தலைவர்கள் எல் கே அத்வானி முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்டோர் தீர்ப்பின் போது நேரில் ஆஜராக வேண்டும் என்று சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி எஸ் கே யாதவ் தெரிவித்துள்ளார்.

 

கடந்த 1992 ஆம் ஆண்டு பாபர் மசூதி இடிக்கப்பட்ட நிலையில், அது தொடர்பான வழக்கில் அத்வானி உள்ளிட்டோர் விசாரிக்கப்பட்டு வந்தனர். இதில் சிபிஐ தரப்பில் 351 பேர் சாட்சியம் அளித்திருந்தனர். மேலும் சுமார் 600 ஆவணங்களும் நீதிமன்றத்திடம் சமர்ப்பிக்கப்பட்டு இருந்தன.

Leave a Reply

Right Menu Icon