எஜமானர் உயிரிழந்ததால் அவரது செல்லநாயும் உயிரிழந்த சம்பவம்..!
கர்நாடகாவில் எஜமானர் பிரிவை தாங்க முடியாமல் ஒரு வளர்ப்பு நாய் உயிர் விட்ட சம்பவம் நெகிழ செய்துள்ளது. பெலகாபி மாவட்டம் அமராதி என்ற கிராமத்தில் வசித்த பால் வியாபாரி சங்கரப்பா என்பவர் கட்டி என்ற நாயை வளர்த்துவந்தார். சங்கரப்பா உடல் நலக்குறைவால் கடந்த வாரம் திடீரென மரணம் அடைந்து விட்டார்.
எஜமானரை காணாது பல இடங்களில் தேடி பார்த்த வளர்ப்பு நாய் எதுவும் சாப்பிடாமல் பட்டினி கிடந்து உயிர் விட்டது. வீட்டில் செல்லமாக வளர்த்த நாயை குடும்பத்தினர் அலங்கரித்து சங்கரப்பாவின் சமாதி அருகிலேயே அடக்கம் செய்தனர்.







