--- --:--:-- --

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நாளை தொடங்கும் நிலையில், இன்று அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறுகிறது.

01

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நாளை தொடங்கி அடுத்த மாதம் 15ஆம் தேதி வரை 19 அமர்வுகளாக நடைபெறவுள்ளது. இந்த மழைக்கால கூட்டத்தொடரில் பல்வேறு மசோதாக்களை தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதேநேரம், நீட் வினாத்தாள் முறைகேடு, ராமர் கோயில் காணிக்கை முறைகேடு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் தயாராகி வருகின்றன.

 

 

இந்நிலையில், மழைக்கால கூட்டத்தொடரை முன்னிட்டு இன்று நடைபெறும் அனைத்து கட்சிகள் கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. இதில், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் சுமுகமாக நடைபெற அனைத்து கட்சிகளும் ஒத்துழைக்க வேண்டுமென சபாநாயகர் வலியுறுத்தவுள்ளார்.

 

 

இதற்கிடையே, மேகதாது அணை விவகாரம் தொடர்பாக திமுக மக்களவைக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலுவும், திமுக மாநிலங்களவைக் குழுத் தலைவர் திருச்சி சிவாவும் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் அளித்துள்ளனர்.

 

 

அதேசமயம், மேகதாது விவகாரத்தில் தமிழ்நாடு முறையிட்டால் பிரச்சனை இல்லை எனத் தெரிவித்துள்ள கர்நாடக முதலமைச்சர் டிகே சிவக்குமார், தங்கள் எம்.பி.க்கள் உண்மையை எடுத்துரைப்பார்கள் எனத் தெரிவித்துள்ளார். மேகதாது அணை தமிழ்நாட்டிற்கு பலன் தரும் திட்டம் என்பதில் தெளிவாக இருப்பதாகவும் சிவக்குமார் கூறினார்.

Leave a Reply

Right Menu Icon