--- --:--:-- --

இந்தியாவின் பெயரை மாற்றினால் எதிரமறையான விளைவுகளை சந்திக்க நேரிடும் : வைகோ

8

இந்தியாவின் பெயரை மாற்ற நினைத்தால் எதிர்மறை விளைவுகள் நேரும் என மதிமுக பொதுச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.

 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் இந்தியா எனும் பெயரை இந்துஸ்தான் அல்லது பாரத் என மாற்றக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டதும் இதனை கோரிக்கை மனுவாக கருதி மத்திய அரசு முடிவெடுக்கும் என நீதிபதிகள் தெரிவித்திருப்பது சுட்டிக்காட்டியுள்ளார்.

 

இந்திய அரசியல் நிர்ணய சபையில் ஹிந்துஸ்தான் என்ற பெயரை சூட்ட வேண்டும் என்ற கோரிக்கைக்கு கடும் எதிர்ப்புகள் எழுந்தது. இது மறைக்க முடியாத வரலாறு என்றும் நாட்டின் பெயரையே மாற்றும் முயற்சியில் ஈடுபட்டு வரும் மத்திய அரசு உச்சநீதி மன்றத்தை துணைக்கு அழைப்பதாக குற்றம் சாட்டியுள்ளார்.

 

இந்தியாவின் பெயரை மாற்ற வேண்டுமெனில் இந்திய ஐக்கிய நாடுகள் என்று மாற்றுவதுதான் பொருத்தமாகவும் கூட்டாட்சி கோட்பாட்டிற்கு வலு சேர்ப்பதாகவும் அமையும் என்று கூறியிருக்கும் வைகோ தங்கள் விருப்பம் போல் நாட்டின் பெயரை மாற்ற நினைத்தால் எதிர்மறையான விளைவுகளையே உருவாக்கும் என்றும் எச்சரித்துள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon