பிரான்சில் இருந்து இந்தியா வந்தடைந்த மேலும் 3 ரபேல் போர் விமானங்கள்..!
பிரான்ஸில் இருந்து மேலும் 3 ரஃபேல் போர் விமானங்கள் இந்தியா வந்தடைந்துள்ளன. ஈஸ்ட்ரஸ் நகரில் இருந்து புறப்பட்ட விமானங்கள் இடைநிற்றல் இன்றி 8 மணி நேரத்திற்கும் அதிகமாக பயணம் மேற்கொண்டு குஜராத் மாநிலம் ஜாம்நகர் விமானப்படைத் தளத்தை வந்தடைந்தன.
இதனிடையே பிரான்ஸ் போர் விமானத்தின் மூலம் ரஃபேல் விமானங்களுக்கு வானிலேயே எரிபொருள் நிரப்பப்பட்டது. இந்தியா வந்தடைந்த ரஃபேல் விமானங்களின் எண்ணிக்கை 8 ஆக அதிகரித்துள்ளது.
டசால்ட் நிறுவனத்துடன் போடப்பட்ட ஒப்பந்தத்தின் படி மீதமுள்ள 28 ரஃபேல் விமானங்களும் அடுத்த ஆண்டு இறுதிக்குள் இந்தியா வந்தடையும் என கூறப்படுகிறது.







