தாயாரின் காரிய நிகழ்ச்சிக்கு வந்த அக்காவை அடித்து கொலை செய்த தம்பி..!
ராணிப்பேட்டையில் தாயாரின் காரிய நிகழ்ச்சிக்கு குடிபோதையில் வந்தவர் தன்னை கண்டித்துப் பேசிய அக்காவை கையால் அடித்துக் கொலை செய்தார். காவேரிப்பாக்கம் அருகில் வசித்து வரும் ஜோதி என்பவர் தனது வீட்டில் நடைபெற்ற தன் தாயாரின் காரிய நிகழ்ச்சிக்கு குடிபோதையில் வந்து தகராறில் ஈடுபட்டுள்ளார்.
இதனை சாந்தி கண்டித்ததால் ஆத்திரம் அடைந்த ஜோதி தன் சகோதரியை தாக்கியதாக கூறப்படுகிறது. மயக்கமடைந்த சாந்தியை மருத்துவமனை அழைத்து சென்ற போது அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டதால் போலீசார் ஜோதியை கைது செய்தனர்.







