--- --:--:-- --

உச்ச நீதிமன்றத்துக்கு நன்றி – அண்ணாமலை

12

வி த லீடர்ஸ் அமைப்பின் நிறுவனர் அண்ணாமலை தனது சமூக வலைதள பக்கத்தில், “திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில், வரும் நவம்பர் 24-ஆம் தேதி கார்த்திகை தீபத் திருநாளன்று தீபம் ஏற்ற அனுமதி வழங்கிய மாண்புமிகு உச்சநீதிமன்றத்திற்கு, முருகப்பெருமானின் பக்தர்கள் சார்பில் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

 

 

திருப்பரங்குன்றம் தீபத்தூண் குறித்த பாரம்பரிய நடைமுறைகளையும், பக்தர்களின் நீண்டகால கோரிக்கையையும் கருத்தில் கொண்டு, இனிவரும் ஆண்டுகளிலும் தீபத்தூணில் தீபம் ஏற்றுவதற்கு நிரந்தரமான தீர்வை மாண்புமிகு உச்சநீதிமன்றம் வழங்கும் என நம்புகிறோம்.

 

 

மேலும், மாண்புமிகு உச்சநீதிமன்றத்தின் உத்தரவுகளை மதித்து, எவ்வித இடையூறுகளும் இன்றி திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றப்படுவதை, தவெக அரசு உறுதி செய்யும் என எதிர்பார்க்கிறோம்.” என்று கூறியுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon