--- --:--:-- --

திருப்பரங்குன்றம் தீபத்தூண் வழக்கில் உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.!

1

மதுரை திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பான விவகாரத்தில் தீபத்தூணில் நிபந்தனையுடன் தீபம் ஏற்ற அனுமதி அளித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருப்​பரங்​குன்​றம் மலை​யில் உள்ள கல்​தூணில் தீபம் ஏற்ற அனுமதி அளித்து சென்னை உயர் நீதி​மன்​றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு மற்​றும் தர்கா நிர்​வாகம் தரப்​பில் உச்ச நீதி​மன்​றத்​தில் மேல்​முறையீடு தாக்​கல் செய்​யப்​பட்​டது.

 

 

அதேபோல், கார்த்​திகை திருநாளன்று பக்​தர்​கள் அனைவரை​யும் மலை​யில் தீபம் ஏற்ற அனுமதிக்​கக் கோரியும், தொல்​லியல் துறை அனுமதி பெற வேண்​டும் என்ற சரத்​துக்கு எதிராகவும் ராம ரவிக்​குமார் என்​பவர் உச்ச நீதி​மன்​றத்​தில் மேல்​முறையீடு செய்​திருந்​தார். இந்த மனுக்​கள் உச்ச நீதி​மன்ற நீதிப​தி​கள் அர​விந்த் குமார், விபுல்.எம்.பஞ்​சோலி ஆகியோர் அடங்​கிய அமர்வு முன்பு கடந்த நவம்பர் 17ஆம் தேதி முதல் விசா​ரிக்​கப்​பட்டு வந்தது.

 

 

இந்த நிலையில் கடந்த 3 நாட்களாக அனைத்து தரப்பு வாதங்களை கேட்ட பிறகு, இன்று இதற்கான தீர்ப்பு வாசிக்கப்பட்டது. அதில், தீபத்தூணில் நிபந்தனையுடன் தீபம் ஏற்ற அனுமதி அளித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோயில் சார்பில் குறிப்பிட்ட நபர்கள் மட்டுமே சென்று தீபம் ஏற்ற வேண்டும். முழக்கம் எழுப்புவது போன்ற எந்த செயல்களிலும் ஈடுபடக்கூடாது என நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது.

 

இந்த ஆண்டு கார்த்திகை தீபத்தன்று மட்டும் தீபம் ஏற்ற அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தேவைப்பட்டால் மத்திய பாதுகாப்பு படையை கோரலாம். தீபத்திருவிழா முடிந்த பிறகு 3 நாட்களில் ஆட்சியர் அறிக்கை அளிக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon