உச்ச நீதிமன்றத் தீர்ப்பு கவலையளிக்கிறது: ஜவாஹிருல்லா
மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா வெளியிட்ட அறிக்கையில், ”திருப்பரங்குன்றம் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு ஆழ்ந்த கவலையும், அதிர்ச்சியும் அளிக்கிறது. சர்ச்சைக்குரிய இடத்தில் தீபம் ஏற்றுவதற்கு அனுமதித்தது முரண்பாடான அணுகுமுறையாக உள்ளது.
ஒரு மதத்தினரின் வழிபாட்டு உரிமையை நிலைநாட்டுவதாக கூறி, மற்ற மதத்தினரின் உரிமையில் தலையிடக்கூடாது. மத உரிமைகள் பெரும்பான்மையின் விருப்பத்தால் தீர்மானிக்கப்பட வேண்டியது அல்ல. சிறுபான்மை மக்களின் நம்பிக்கையை காப்பதே உண்மையான அரசமைப்பு சட்டக் கடமையாகும்“ என்று தெரிவித்துள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




