--- --:--:-- --

தமிழகத்தில் மூன்று மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை

images - 2026-11-05T112305.715

தென் தமிழகப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டலச் சுழற்சியின் காரணமாகத் தென் மாவட்டங்கள் மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. சென்னையைப் பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படுவதுடன் சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

 

 

நவம்பர் 6 மற்றும் 7ஆம் தேதிகளில் தேனி, திண்டுக்கல், மதுரை, தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை ஆகிய ஏழு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தீபாவளி நாளான நவம்பர் 8ஆம் தேதியும் பத்து மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என முன்னறிவிப்பு வெளியாகியுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon