--- --:--:-- --

தி.மு.க-அ.தி.மு.க கூட்டணிக்கு எந்தக் காலத்திலும் வாய்ப்பு இல்லை – கனிமொழி

6

திமுக-அதிமுக கூட்டணிக்கு எந்தக் காலத்திலும் வாய்ப்பு இல்லை என திமுக எம்பி கனிமொழி தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுகவும் அதிமுகவும் ஒரே கூட்டணியில் இணைவதற்கான சாத்தியம் எப்போதும் இல்லை என்றும் கூறினார்.

 

 

மேலும், பாஜகவுக்கு எதிராக தவெக அரசு எந்தக் கருத்தையும் தெரிவிப்பதில்லை என விமர்சித்த கனிமொழி, மாநில உரிமைகளை பாதிக்கும் வகையில் உள்ளதாக கூறப்படும் கனிமவள மசோதாவுக்கு எதிராகவும் தவெக அரசு இதுவரை உரிய நிலைப்பாட்டை வெளிப்படுத்தவில்லை என குற்றம்சாட்டினார். மாநில உரிமைகள் தொடர்பான முக்கிய விவகாரங்களில் தமிழக அரசு தனது நிலைப்பாட்டை தெளிவாக வெளிப்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon