வரலாற்றில் முதல்முறை ஒரே வரிசையில் தி.மு.க, அ.தி.மு.க எம்.எல்.ஏ.க்கள்
சட்டசபையில் இதுவரை கண்டிராத வித்தியாசமான நிகழ்வு அரங்கேறி இருக்கிறது. அதாவது, தமிழ்நாடு அரசியல் வரலாற்றில் எதிர்க்கட்சி வரிசையில் திமுக மற்றும் அதிமுக உறுப்பினர்கள் அருகருகே அமர்ந்துள்ளனர். திமுக, 1967ம் ஆண்டிலும், அதிமுக 1977ம் ஆண்டிலும் ஆட்சிக்கு வந்த நிலையில், அன்றில் இருந்து இரு கட்சிகளே தமிழகத்தை மாறி மாறி ஆட்சி புரிந்து வந்தனர்.
தற்போது த.வெ.க. தனிப்பெரும் கட்சியாக உருவாகி ஆட்சியை பிடித்துள்ளதால், திமுக, அதிமுக எம்.எல்.ஏ.க்கள் எதிர்க்கட்சி வரிசையில் உள்ளனர். அதேபோல், அதிமுக தொடர்ந்து 2வது முறையாக எதிர்க்கட்சி வரிசையில் அமர்வதும் இதுவே முதல்முறை.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




