--- --:--:-- --

டிரம்பை தொடர்ந்து சீன வெளியுறவுத்துறை அமைச்சர் பேச்சு!

3

ந்தியா – பாகிஸ்தான் இடையே தன்னால் அமைதி திரும்பியதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தொடர்ந்து கூறி வரும் நிலையில் சீனாவும் இருதரப்புக்கும் இடையே சமாதான பேச்சுவார்த்தை நடத்தியதாக சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யீ பேசியது சர்வதேச அரசியலில் மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

சீனாவின் வெளியுறவுக் கொள்கை தொடர்பாக நடைபெற்ற கருத்தரங்கில் பேசிய சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யீ, 2 ஆம் உலகப்போருக்கு பிறகு 2025 ஆம் ஆண்டில் தான் பல நாடுகளுக்கு இடையே போர் மூண்டதாக கூறினார்.

 

பாலஸ்தீனம் – இஸ்ரேல், கம்போடியா – தாய்லாந்து, ஆகிய நாடுகளுக்கு இடையே சமரசப் பேச்சுவார்த்தையில் சீனா ஈடுபட்டதாகவும் வாங் யீ கூறினார். பகல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு பிறகு இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற தாக்குதலை தொடர்ந்து இருநாடுகளுக்கும் இடையே அமைதியை நிலைநாட்ட சீனா சமரச பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறினார்.

 

ஆபரேஷன் சிந்தூருக்கு பிறகு இந்தியா மீது தாக்குதல் நடத்த பாகிஸ்தானுக்கு சீனா நவீன டிரோன்கள் வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் சீன வெளியுறவுத்துறை அமைச்சரின் இந்த பேச்சு சர்வதேச அரசியலில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon