தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட், 3 ஒரு நாள் மற்றும் 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. தென்னாப்பிரிக்க அணியும் ஒரு நாள் கிரிக்கெட் தொடரை இந்திய அணியும் கைப்பற்றின.
இதையடுத்து டி20 கிரிக்கெட் தொடர் இன்று தொடங்குகிறது.
இதில் இந்திய அணியின் கேப்டனாக சூர்யகுமார் யாதவ் செயல்படுவார். இந்த தொடருக்கான இந்திய அணியில் சுப்மன் கில் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். அபிஷேக் சர்மா, திலக் வர்மா, ஹர்திக் பாண்ட்யா, அக்சர் படேல், ஜிதேஷ் சர்மா, சஞ்சு சாம்சன், ஜெய்ஸ்வால், பும்ரா உள்ளிட்ட வீரர்கள் அணியில் இடம் பெற்றுள்ளனர்.
இன்றைய போட்டி ஒடிசா மாநிலம் கட்டாக்கில் உள்ள பராபதி விளையாட்டு மைதானத்தில் நடைபெறுகிறது. சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி ஆசிய கோப்பை தொடரை வென்றதுடன் வலுவான ஆஸ்திரேலியா அணியையும் வீழ்த்தி இருக்கிறது.
மேலும் செய்திகள் :
ஸ்லீப்பர் வந்தே பாரத் ரயில் சேவை இன்று தொடக்கம்..!
நடிகர் விஜய் சேதுபதியின் பிறந்தநாள்..!
திருப்பரங்குன்றம் தர்காவில் பிறை கொடி அகற்றம்..!
பிப்ரவரி 15-க்குள் ஆசிரியர் தகவல்கள் புதுப்பிக்க வேண்டும்..!
திருவள்ளுவர் தினத்தன்று, அந்த மாபெரும் ஞானிக்கு எனது மனமார்ந்த அஞ்சலியை செலுத்துகிறேன் - அமித்ஷா
மத்திய கல்வி அமைச்சருக்கு மோடி மொழி மட்டுமே தெரியும்; அதுதான் பிரச்சனையே - கர்நாடக அமைச்சர் மது பங்க...






