--- --:--:-- --

மீனவர்கள் சங்கம் எச்சரிக்கை!

3

சென்னை பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச்செயலகம் அமைப்பது தொடர்பான அரசாணையை ஐந்து நாட்களில் திரும்பப் பெறாவிட்டால் மீனவர்களை திரட்டி பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என்று மீனவர்கள் சங்கம் எச்சரித்துள்ளது.

 

பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து முள்ளிக்குப்பம், முள்ளிமா நகர், மயிலை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மீனவ கிராம பஞ்சாயத்து சபைகள் சார்பில் சீனிவாசபுரத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், 500 க்கும் மேற்பட்ட மீனவர்கள், அதிமுக நிர்வாகி காளியம்மாள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு கருப்பு கொடி ஏந்தி கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

அமைச்சர் வெங்கடரமணன் தேர்தலுக்கு முன்பு தங்களுக்கு பட்டா வழங்கப்படும் என உறுதியளித்த நிலையில், தற்போது தங்களை சந்திக்கவில்லை என்றும் விஜயன் கவலை தெரிவித்தார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon