--- --:--:-- --

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற கால அவகாசம் முடிந்து விட்டது!

4

திருப்பரங்குன்றத்தில் மலை உச்சியில் தீபம் ஏற்ற கால அவகாசம் முடிந்து விட்டது என தமிழ்நாடு அரசு உயர் நீதிமன்ற மதுரைகிளையில் தெரிவித்துள்ளது. மேலும் உச்ச நீதிமன்றத்தில் இது தொடர்பான மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளதால் விசாரணையை வரும் திங்கள் கிழமை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

 

கார்த்திகை தீபத்தன்று, திருப்பரங்குன்றம் மலைஉச்சியில் வழக்கத்திற்கு மாறான இடத்தில் தீபம் ஏற்ற வேண்டும் என்ற உத்தரவை அமல்படுத்தவில்லை எனக் கூறி நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த மனு மீதான இன்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது.

 

அப்போது அரசு தரப்பில், திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றுவதற்கான கால அவகாசம் முடிந்து விட்டது. எனவே இந்த வழக்கை விசாரிக்க அவசரம் காட்டக் கூடாது என தெரிவித்தார். அரசு வழக்கறிஞரின் இந்த வாதத்திற்கு நீதிபதி சுவாமிநாதன் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

மேலும் கோவில் பிரச்னையில் நீதிமன்றம் தலையீட முடியாது என்றும் சட்டம் ஒழுங்கு பிரச்னையை கருத்தில் கொண்டு தான் மாவட்ட நிர்வாகம் 144 தடை உத்தரவு பிறப்பிக்க இயலும். மேலும் இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளதால் விசாரணையை ஒத்திவைக்க கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணையை வரும் திங்கட்கிழமைக்கு நீதிபதி சுவாமிநாதன் ஒத்திவைத்தார். மேலும் உச்ச நீதிமன்றத்தில் உரிய உத்தரவு பெறாவிட்டால் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுப்பேன் என்றும் தெரிவித்தார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon