--- --:--:-- --

தாராபுரத்தில் விஜய் நாளை பரப்புரை!

13

தமிழ்நாட்டில் அரசியல் களம் உச்சக்கட்ட பரபரப்பை எட்டியுள்ள நிலையில், மதுராந்தகம் (தனி) மற்றும் தாராபுரம் (தனி) ஆகிய இரண்டு சட்டமன்றத் தனித்தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அக்டோபர் 6-ஆம் தேதி நடைபெறவுள்ளது. தாராபுரம் தொகுதியில் தமிழக வெற்றிக் கழக வேட்பாளரை ஆதரித்து, முதலமைச்சர் விஜய் புதன்கிழமை (செப்டம்பர் 30) பிரம்மாண்டப் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு தீவிர பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ளார்.

 

 

முதலமைச்சரின் வருகையை ஒட்டி, தாராபுரம் முழுவதும் ஏற்பாடுகள் படுதீவிரமாய் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக, தாராபுரம் – உடுமலை சாலையில் சுமார் 34 ஏக்கர் பரப்பளவில் பிரம்மாண்டமான மேடை மற்றும் பொதுக்கூட்டத்திற்கான இடங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.

பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கும் வகையில் சாலையின் இருபுறமும் பலத்த பாதுகாப்புத் தடுப்புகள் அமைக்கப்படுவதோடு, 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். இந்தத் தொகுதியில் முதலமைச்சரின் வருகையை முன்னிட்டு, கட்சியினர் மற்றும் முக்கிய நிர்வாகிகள் தீவிர ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி வருகின்றனர்.

 

 

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர்கள் மற்றும் அப்பகுதியைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் பெருமளவில் பங்கேற்றுள்ளனர். நாளை விஜய்யின் வருகையின்போது மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டுள்ளது.

 

தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலை வெற்றிகரமாக எதிர்கொள்ளும் வகையில், தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் பொறுப்பு அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் வழிகாட்டுதலின்படி, ஒவ்வொரு பூத் வாரியாகவும் நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். குறிப்பாக, ஒவ்வொரு நான்கு பூத்களுக்கும் ஒரு மாவட்ட செயலாளர் என்ற முறையில் தேர்தல் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.

 

 

இந்தத் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள பூத் கமிட்டி உறுப்பினர்களும் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர். தேர்தல் பணிகள் எந்த அளவிற்கு நடைபெற்று வருகிறது என்பது குறித்த விவரங்கள் மூத்த அமைச்சர்கள் முன்னிலையில் ஆய்வு செய்யப்பட்டுள்ளன.

 

 

மேலும், தாராபுரம் சட்டமன்றத் தொகுதியில் தேர்தல் பணியாற்றக்கூடிய பூத் கமிட்டி உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகளை முதலமைச்சர் விஜய் நேரடியாகச் சந்திப்பதற்கான தனித் திட்டம் ஒன்றும் வகுக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழக வெற்றிக் கழகத்தின் இந்த அதிரடி நகர்வுகள் மற்றும் பிரம்மாண்டமான பிரச்சார ஏற்பாடுகள், கொங்கு மண்டல அரசியல் பரப்பில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon