--- --:--:-- --

குட்கா கடத்தலை துணிச்சலுடன் தடுத்த தலைமை காவலருக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு!

1

கோவை மாவட்டம் கோவில்பாளையம் காவல் நிலைய.. தலைமை காவலர் வேல்முருகன் மற்றும் உதவி ஆய்வாளர் விக்னேஷ் ஆகியோர் ஞாயிறு அதிகாலை விளாங்குறிச்சி சாலையில் வழக்கமான சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அதிவேகமாக வந்த கர்நாடகா பதிவெண் கொண்ட சொகுசு காரை, சந்தேகத்தின் பேரில் நிறுத்திச் சோதனையிட்டனர்.காரின் பின்புறத்தில் மூட்டை மூட்டையாக மர்ம பொருட்கள் இருப்பதைப் பார்த்த உதவி ஆய்வாளர் விக்னேஷ், அவற்றைச் சோதனையிட முயன்றார்.

 

 

அப்போது காரில் இருந்த ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த 3 பேர் காவல் துறையினரைக் கீழே தள்ளிவிட்டு காரின் கதவுகளை மூடிக்கொண்டு வேகமாகத் தப்பினர். தைக் கண்டு அலர்ட்டான தலைமைக் காவலர் வேல்முருகன், உடனடியாக ஓடும் காரின் மேற்கூரையில் பாய்ந்து தொற்றி பிடித்துக் கொண்டார். ரின் மீது காவலர் இருப்பதையும் பொருட்படுத்தாமல் கடத்தல்காரர்கள் காரை தொடர்ந்து வேகமாக ஓட்டிச் சென்றனர். ளாங்குறிச்சி, காளப்பட்டி நால்ரோடு, சிட்ரா வழியாக கணியூர் சுங்கச்சாவடியை நோக்கி கார் சென்றது.

 

 

காரின் மேற்கூரையில் தலைமை காவலர் வேல்முருகன் ஆபத்தான நிலையில் தொங்கியபடி செல்வதைப் பார்த்த வாகன ஓட்டிகள், தங்களது செல்போன்களில் அந்தக் காட்சிகளைப் பதிவு செய்தனர். ம்பவம் குறித்து தகவல் அறிந்த கணியூர் காவல்துறையினர், அப்பகுதியில் இருந்த ஆம்புலன்ஸிற்கு அலர்ட் விடுத்து, காரை பின் தொடர ஆரம்பித்தனர். மேலும், அவிநாசி காவல் நிலையத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு காரை எதிர்த் திசையில் விரட்டி வந்தனர்.

 

40 கி.மீ. தூரம் நீடித்த இந்த சேசிங் அவிநாசி அன்னபூர்ணா ஹோட்டல் அருகே, முடிவுக்கு வந்தது. ஆம்புலன்ஸ்கள் மற்றும் காவல்துறை வாகனங்கள் கடத்தல்காரர்களின் காரைச் சுற்றிவளைத்து மடக்கிப் பிடித்தனர். கார் நிறுத்தப்பட்டதும் அதிலிருந்த இருவர் கீழிறங்கி தப்பியோடினர். இதனால் வண்டியில் இருந்த ஒருவரைப் பிடித்தும் தப்பியோடிய இருவரையும் விடாது துரத்தி இறுதியாகக் கைது செய்தனர்.

 

 

விசாரணையில், கைது செய்யப்பட்டவர்கள் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும், பெங்களூருவில் இருந்து 300 கிலோ எடையுள்ள தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்களைக் கடத்தி வந்து, கோவையில் கைமாற்ற முயன்றதும் தெரியவந்தது. இதனை அடுத்து பாபு தாரா, ராஜேஷ், சுரேஷ் ஆகிய 3 பேரையும் கைது செய்த அதிகாரிகள், கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட காரையும் குட்கா பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.

 

பெங்களூருவில் இருந்து குட்காவை இவர்களிடம் கொடுத்து அனுப்பியது யார்? அதை உள்ளூரில் வாங்க இருந்தது யார்? உள்ளிட்ட கோணங்களில் கோவை காவல்துறையினர் விசாரணையைத் தீவிரப்படுத்தி உள்ளனர். இந்நிலையில் ஓடும் காரின் மேற்கூரையில் 40 கி.மீ. தூரம் தொங்கியபடி உயிரைப் பணயம் வைத்து கடத்தல்காரர்களைப் பிடித்த தலைமை காவலர் வேல்முருகனின் துணிச்சலுக்குப் பாராட்டுக்கள் குவிந்தன.

இந்நிலையில் தலைமைக் காவலர் வேல்முருகனின்சிறப்பான துணிச்சல், சமயோசிதம் மற்றும் கடமை உணர்வைப் பாராட்டி, முதலமைச்சர் அவர்கள் அவரை நேரில் அழைத்து, அவரது வீரதீர செயலுக்கு பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்தார். மேலும்,தமிழ்நாடு காவல்துறை இயக்குநரும் தலைமைக் காவலர் வேல்முருகனை நேரில் பாராட்டி, அவரது சிறப்பான துணிச்சல் மற்றும் கடமை உணர்விற்கு வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon