--- --:--:-- --

பி.டி. அரசகுமாரின் மகன் மற்றும் மகள் வீடுகளில் சோதனை!

10

தனியார் பள்ளிகள் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் பி.டி. அரசகுமாரின் மகன், மகள் வீடுகளில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனை மேற்கொண்டுள்ளனர். சென்னை ஓ.எம்.ஆர் சாலையில் உள்ள வீடு உள்ளிட்ட இடங்களில் சோதனை நடைபெற்றுள்ளது.

 

தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற்று தருவதாகக் கூறி ரூ.100 கோடி மோசடி செய்ததாக புகார் எழுந்ததை அடுத்து இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. பி.டி.அரசகுமார் ஏற்கனவே கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon