விஜய் பொதுக் கூட்டத்திற்கு காவல் துறை நிபந்தனை..!
புதுச்சேரியில் டிச.,09-ம் தேதி விஜய் பங்கேற்கும் தவெக பொதுக் கூட்டத்திற்கு புதுச்சேரி காவல் துறை நிபந்தனைகளை விதித்துள்ளது. கூட்டத்திற்கு 5,000 பேருக்கே அனுமதி; கர்ப்பிணிகள், குழந்தைகள், முதியோர்களுக்கு அனுமதி இல்லை பொதுக்கூட்டத்திற்கு வருபவர்கள் கியூ ஆர் கோட் முறையில் அனுமதிக்கப்படுவர்.
5,000 பேரை 10 கேபின்களாக பிரித்து ஒரு கேபினுக்குள் 500 பேர் வீதம் அமர்த்த வேண்டும் © மக்களுக்கு குடிநீர் வசதி போன்றவைகளை முறையாக ஏற்பாடு செய்ய வேண்டும். ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்களை தயாராக நிறுத்த வேண்டும் என்று பல நிபந்தனைகளை காவல் துறை விதித்துள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




