த.வெ.க பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் புதன்கிழமை புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமியைச் சந்தித்து, குறைந்தபட்சம் ஒன்றரை கிலோமீட்டராவது ரோடு ஷோ நடத்த அனுமதிக்குமாறு கேட்டுக் கொண்டார். இதற்கு ரங்கசாமி அனுமதி அளிக்காததால் ஏமாற்றத்துடன் திரும்பிய ஆனந்த், செய்தியாளர்களுக்கு பதிலளிக்காமல் காரில் ஏறி சென்றார்.
த.வெ.க தலைவர் விஜய் கரூர் பிரசாரத்தில் ஏற்பட்ட துயர சம்பவத்துக்கு பிறகு தமிழகத்தில் ரோடு ஷோவுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. ரோடு ஷோவுக்கு விதி முறைகள் வகுக்க தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவிட்டது. தமிழக அரசும் விதிமுறைகளை வரைந்து கோர்ட்டில் சமர்ப்பித்துள்ளது. இவ்வழக்கில் ஐகோர்ட் இறுதி தீர்ப்பு வழங்காததால் நிலுவையில் உள்ளது.
இதனால் சமீபத்தில் த.வெ.க. தலைவர் விஜய் காஞ்சிபுரத்தில் கட்சி நிர்வாகி களை சந்தித்தார். இருப்பினும், தொடர்ந்து பிரசாரத்தில் ஈடுபடுவேன் என அவர் அறிவித்திருந்தார். இந்நிலையில் புதுவையில் வருகிற 5-ந் தேதி விஜய் ரோடு ஷோ நடத்தத.வெ.க சார்பில் புதுவை காவல் துறையிடம் அனுமதி கோரப்பட்டது. ஐகோர்ட்டில் வழக்கு நிலுவையில் இருப்பதைக்காட்டி புதுவை காவல்துறை ரோடு ஷோ நடத்த அனுமதி மறுத்துள்ளது.
இருப்பினும் த.வெ.க பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த், முதலமைச்சர் ரங்கசாமி, காவல்துறை அதிகாரிகளை 2 முறை சந்தித்து தங்களுக்கு அனுமதி வழங்கும்படி வலியுறுத்தி வந்தார்.இதையடுத்து புதுவை காவல்துறை, ரோடு ஷோவுக்கு பதிலாக பொதும் கூட்டம் நடத்தினால் அனுமதி வழங்கப்படும் என தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து உப்பளம் துறைமுக வளாகத்தில் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி தரும்படி தமிழக வெற்றி கழகம் தரப்பில் கோரப்பட்டது. தற்போது கடலூர் சாலையில் மேம்பாலம் கட்டும் பணி நடந்து வருகிறது. போக்குவரத்து நெருக்கடி உப்பளம் மைதானம் செல்லும் பாதை மிகவும் குறுகலானது.
விஜய் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க புதுவை மட்டுமின்றி, கடலூர், விழுப்புரம், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை பல்வேறு பகுதிகளில் இருந்தும் தொண்டர்கள் திரள்வார்கள். இதனால், புதுவையில் பெரும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படும். எனவே லாஸ்பேட்டை ஹெலிபேட் விமான தளத்தில் பொதுக் கூட்டம் நடத்தும்படி போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.
அதோடு, தமிழக பகுதிகளிலிருந்து தொண்டர்கள் வருவதை தவிர்க்க த.வெ.க தலைமை அறிவுறுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர். ஆனாலும், இதுவரை இறுதி முடிவு எடுக்கப்படவில்லை. ஒருவேளை பொதுக்கூட்டத்தில் பங்கேற்க விரும்பினாலும், விஜய் காலாப்பட்டில் இருந்து பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்துக்கு பிரச்சார வாகனத்தில் சென்றால் கடும் தெரிசல் ஏற்படும். இதனால் நேரடியாகவிமானம் மூலம் லாஸ்பேட்டை விமான வந்து நிலையத்துக்கு பொதுக்கூட்டத்தில்
பங்கேற்றுவிட்டு திரும்பும்படி போலீசார் கூறியுள்ளனர்.
இதற்கிடையே இன்று நான்காவது முறையாக ஆனந்த் முதலமைச்சர் ரங்கசாமியை சட்டமன்ற அலுவலகத்தில் சந்தித்தார் குறைந்தபட்சம் 1.5 கிலோமீட்டர் ஆவது ரோட்ஷோக்கு அனுமதி கொடுங்கள் என கேட்டுள்ளார் அதற்கு ரங்கசாமி மறுத்ததாக தெரிகிறது முதல்வரைப் பார்த்துவிட்டு வெளியே வந்த ஆனந்த் பத்திரிகையாளர் கேள்விக்கு பதில் அளிக்காமல் சிரித்தபடி காரில் ஏறி சென்றார்






