--- --:--:-- --

திருப்பூரில் கந்தசஷ்டி விழாவை முன்னிட்டு சுப்பிரமணியசுவாமி வள்ளி, தெய்வானை திருக்கல்யாணம் கோலாகலம்!

f561981a-c1b3-42e0-851b-c8d8d5e58386

திருப்பூர் சிறுபூலுவபட்டி அம்மன் நகரில் அமைந்துள்ள ஸ்ரீ வலம்புரி செல்வ சித்தி விநாயகர் ஆலயத்தில், சுப்பிரமணியர் வள்ளி தெய்வானை திருக்கல்யாண நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றது.விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

 

திருக்கல்யாணத்தில் குருக்கள், கணேஷ், செந்தில் ஆகியோா் அலங்கார பூஜைகள் செய்தனர். மொய் எழுதிய பக்தர்களுக்கு மஞ்சள், குங்குமம், மஞ்சள் கயிறு, அடங்கிய பிரசாதம் வழங்கப்பட்டது.

விழா ஏற்பாடுகளை ராமு தமிழ்ச்செல்வி,சரவணகுமார் சரண்யா,சதீஷ் ஜீவா ஆகியோர் செய்திருந்தனா்.விழாவில் 25 வாா்டு கவுன்சிலர் தங்கராஜ், கோவில் கமிட்டி நிா்வாகிகள் ஆறுமுகம், சிரோன் மணி, தேவராஜ், ரமேஷ் பாபு, செல்வராஜ், பாலகிருஷ்ணன், பூபதி, முருகேஷ்,குமார், ராஜ் பிரதாப்,பாலகுமாரன்ஆகியோர் பங்கேற்றனர்.

 

தொடர்ந்து தீபாராதனை காட்டப்பட்டது. விழாவில் கலந்து கொண்ட பொதுமக்களுக்கும், பக்தர்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon