மாணவன் தற்கொலை..பள்ளி வாகனங்களுக்கு தீ வைப்பு!
நெல்லை, வீரவநல்லூரில் தனியார் பள்ளி மாணவன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் ஆத்திரமடைந்த உறவினர்கள் பள்ளி வேன்களுக்கு தீ வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பத்தாம் வகுப்பு மாணவனான சபரிகண்ணன் (15) கடந்த 4-ம் தேதி முதல் ஹாஸ்பிடலில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பதற்றத்தை தடுக்க வீரவநல்லூரில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
📱 Share on WhatsApp
𝕏 Share on X





