இறந்ததாக நினைத்த மூதாட்டி உயிருடன் வந்த அதிசயம்..!
கேரளாவில் கிணற்றுக்குள் விழுந்து இறந்துவிட்டதாக நினைத்த மூதாட்டி, உயிருடன் மீட்கப்பட்ட நெகிழ்ச்சி சம்பவம் நடந்துள்ளது. பாலக்காடு மாவட்டத்தில் தாச்சாயிணி (68) என்ற மூதாட்டி, அங்குள்ள கிணற்றில் விழுந்தது தெரியவந்தது.
அவர் இறந்துவிட்டதாக குடும்பத்தினரும், கிராமத்தினரும் முடிவு செய்தனர். உடலை மீட்பதற்காகச் சென்ற தீயணைப்பு வீரர்கள் மூதாட்டி உயிருடன் இருப்பதை அறிந்து பத்திரமாக மீட்டுள்ளனர்.
📱 Share on WhatsApp
𝕏 Share on X





