--- --:--:-- --

அண்ணாமலையிடம் விசாரணை கோரிய மனு தள்ளுபடி..!

2

ண்ணா பல்கலைக்கழக வழக்கில் தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலையை விசாரிக்க வேண்டும் என ஐகோர்ட்டில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

 

வழக்கறிஞர் எம்.எல்.ரவி அளித்த அந்த மனுவில், பாலியல் வன்கொடுமை சம்பவத்தை தொடர்ந்து, ஞானசேகரன் யார் யாரிடம் போனில் பேசினார் என்பதற்கான ஆதாரங்கள் தன்னிடம் உள்ளதாக சொன்ன அண்ணாமலை, அவற்றை சிறப்பு புலனாய்வுக் குழுவிடம் அளிக்கவில்லை என்றும் அது தொடர்பாக விசாரிக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.

 

இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுவை தள்ளுபடி செய்வதாக கூறிய நீதிபதிகள், அரசியல்வாதிகள் கூறும் கருத்துகளுக்கு கோர்ட்டு பதிலளிக்க வேண்டுமா? இதுபோன்ற கருத்துகளை புறக்கணிக்க வேண்டும். இதுபோன்ற வழக்குகள் தாக்கல் செய்ய வேண்டுமானால் தினமும் 100 வழக்குகள் தாக்கல் செய்ய வேண்டியது வரும் என தெரிவித்துள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon