--- --:--:-- --

ஆர்.என். ரவி டெல்லி பயணம்: அமித்ஷாவை சந்திக்க திட்டம்

3

கடந்த மாதம் 26-ந் தேதி டெல்லிக்கு ஒருநாள் பயணமாக சென்று வந்த ஆளுநர் ஆர்.என். ரவி, தற்போது 4 நாள் பயணமாக மீண்டும் டெல்லி சென்றுள்ளார். இன்று காலை 8.55 மணிக்கு ஏர் இந்தியா பயணிகள் விமானத்தில் சென்னையில் இருந்து டெல்லி புறப்பட்டு சென்றுள்ளார்.

 

ஒரே வாரத்தில், 2-வது முறையாக கவர்னர் டெல்லி சென்றது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த 4 நாள் பயணத்தில் அவர், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோரை சந்தித்து பேசுவார் என்று கூறப்படுகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon