அஜித்குமார் மரணம்.. தவெக போராட்டம் அறிவிப்பு..!
திருப்புவனம் அருகே காவலாளி அஜித்குமார், போலீசால் அடித்துக் கொல்லப்பட்டது தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் கடுமையாக அரசை சாடி வருகின்றன.
அஜித்குமார் வழக்கை விரைந்து விசாரிக்க சிறப்புக் குழுவை அமைக்குமாறு தவெக தலைவர் விஜய் வலியுறுத்தினார். தொடர்ந்து, இந்த விவகாரத்தை கண்டித்து ஜூலை 3-ல் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தவெக அறிவித்துள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




